நித்திரவிளை அருகே வாடிக்கையாளர்களை அலைக்கழிக்கும் வங்கி!

நித்திரவிளை அருகே வாடிக்கையாளர்களை அலைக்கழிக்கும் வங்கி!

in News / Local

நித்திரவிளை அருகே செம்மான் விளையில் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியில் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கணக்கு வைத்துள்ளனர். இவர்கள் பணபரிமாற்றம், டிடி எடுக்க, அரசு திட்டங்களின் சலுகை பெற, கடன் பெறுவது என பல்வேறு தேவைக்காக தினமும் வருகின்றனர். இந்த வங்கியில் டோக்கன் முறை செயல் படுத்தப்படுகிறது. கடந்த 6 மாதங்களாக இந்த வங்கியின் சேவை வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய ஓரே ஒரு கவுண்டர் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. இதனால் காலை 11 மணியளவில் பணம் எடுக்க வந்தால் 2 மணிக்கு தான் பணம் கிடைக்கும். பணம் செலுத்த 3 மணி நேரம் ஆகிறது. புதிய கணக்கு தொடங்க காலையில் வந்தால் மாலை தான் திரும்பி செல்லமுடியும். டோக்கன் முறை இருந்தாலும் அதை முறையாக செயல்படுத்துவதில்லை, இவ்வாறு இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் பல் வேறு நிலைகளில் அலைகழிக்கப் படுகின்றனர்.

இந் த வ ங் கி யின் அருகில் உள்ள ஏடிஎம் மில் காலை 11 மணிக்கு பண ம் தீர்ந்து விடும். பிறகு மாலையில் தான் பணம் நிரப்பப்படுகிறது. அது போல் பாஸ் புக் பதிவு செய்ய முடிய வில்லை. வங்கி தேர்வு, வேலை வாய்ப்புக்கான டிடி எடு ப் ப தற் கான விண் ணப் பம் சரியாக கிடைப்பதில்லை. இத னால் வேறு வ ங் கிக்கு சென்று டிடி எடுக்க வேண்டிய நிலை ஏற்படு கிறது. இது சம்பந்தமாக வங்கி மேலாளரிடம் கேட்டால் ஆள் பற்றாக் குறை என கூறுகிறார்.

வங்கி சேவை சரியாக இல்லாததால் இப்பகுதி மக்கள் குறிப்பாக மாணவ மாணவிகள் கடும் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வங்கியை ஆய்வு செய்து வங்கியின் சேவை மக்களுக்கு முழுமையாக கிடைக்க தகுந்த நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top