நாகர்கோயில் தொழிலாளர் தினத்தையொட்டி கபசுரக்குடிநீர்,முகக் கவசம் வழங்கல்;

நாகர்கோயில் தொழிலாளர் தினத்தையொட்டி கபசுரக்குடிநீர்,முகக் கவசம் வழங்கல்;

in News / Local

தொழிலாளர் நல தினத்தையொட்டி கோட்டார் பகுதியில் குமரியின் கரங்கள் சமூகநல இயக்கத்தினர், கோட்டாறு போலீசாருடன் இணைந்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முகக் கவசங்களை வழங்கினர்.

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் குமரியின் கரங்கள் சமுக நல்ல இயக்கத்தினர், கொரானா முதல் அலையின் போது மாவட்டம் முழுவதும் கபசுர குடிநீர், முகக் கவசங்கள், ஏழை குடும்பங்களுக்கு அரிசி காய்கறி, பருப்பு போன்ற பொருள்களை வழங்கி வந்தனர்.

இந்நிலையில் தற்போது கொரானா இரண்டாம் அலை துவங்கியுள்ளதை அடுத்து நாகர்கோவில் கோட்டாறு காவல் நிலையத்துடன் இணைந்து, காவல் நிலையம் முன்பு இன்று அந்த வழியாகச் சென்ற பொது மக்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசங்கள், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top