கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை

in News / Local

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் ( Covid - 19 ) நோய் தொற்று பரவலை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளிலிருந்து குமரி மாவட்டத்திற்கு வருகின்ற அனைவரும் சுகாதார துறையினர் மூலம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் கொரோனா வைரஸ் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்றி வருகின்றனர். மாவட்டத்திலுள்ள அனைத்து ரெஸ்டாரண்டுகளில் உணவு அறைகளில் ( Dining Service ) அமர்ந்து உணவு அருந்தக்கூடாது. பார்சல் மூலம் பொதுமக்களுக்கு உணவுகள் விற்கப்படவேண்டும் . மாவட்டத்திலுள்ள திருமண மண்டபங்கள் , சமூதாய நலக்கூடங்கள் அனைத்தும் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்பட வேண்டும். திருமணங்கள் , விழாக்கள் எதுவும் முன்பதிவு செய்யக்கூடாது . திருமண மண்டபங்களில் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட திருமணங்கள் திருமண மண்டபத்தில் நடைபெறுவதை ரத்து செய்யப்படவேண்டும் . வழிபாட்டு தலங்களில் அன்றாடம் வழங்கப்படும் அன்னதானம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படவேண்டும் . பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களான அனைத்து இ - சேவை மையங்களும் 31 . 03 . 2020 வரை செயல்படுவதும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது . மக்களின் அன்றாட அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வசதியாக மற்றும் மக்கள் அதிகம் கூடாத சிறிய காய்கறிக்கடை , பழக்கடைகள் , பலசரக்கு கடைகள் மற்றும் மருந்தககங்கள் செயல்பட தடையேதும் இல்லை . பெருவணிக வளாகங்கள் , நகைக்கடைகள் தொடர்ந்து 31 . 03 . 2020 வரை மூடப்படவேண்டும் . குளிர் சாதன வசதி கொண்ட பேருந்துகள் அனைத்தும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன . பொதுமக்கள் ரொக்க பண பரிவர்த்தனையினை தவிர்த்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . இன்னு வரையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் எந்தவொரு நபருக்கும் கொரோனா வைரஸ் தொற்று எதுவும் தென்படவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top