டிரைவரை விசாரணைக்கு அழைத்து சென்றதால் கன்னியாகுமரி போலீஸ் நிலையம் முற்றுகை!

டிரைவரை விசாரணைக்கு அழைத்து சென்றதால் கன்னியாகுமரி போலீஸ் நிலையம் முற்றுகை!

in News / Local

கன்னியாகுமரியை அடுத்த ராமன்புதூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராஜேஷ், சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து, ஓட்டி வந்தார். இந்த நிலையில் அவரை கன்னியாகுமரி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அன்பரசு விசாரணைக்காக அழைத்து சென்றார். இதனை கண்டித்து தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாநில நிறுவனத்தலைவர் தினகரன் தலைமையில் ஏராளமானோர் நேற்று கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு சப்–இன்ஸ்பெக்டர் அன்பரசு மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

இதில் மாநில செயலாளர் அஸ்மி, இளைஞர் அணி தலைவர் ராம்தாஸ், மாவட்ட அமைப்பாளர் குமரி அலெக்ஸ், நிர்வாகிகள் பாலமுருகன், முருகன், ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயச்சந்திரன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சரக்கு ஆட்டோ டிரைவரை விசாரணை நடத்த தான் அழைத்து வந்தோம். அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்று கூறினார். பின்னர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட சரக்கு ஆட்டோவும் விடுவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டு, அனைவரும் கலைந்து சென்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top