சபரிமலை புனிதம் காக்க, 144 தடை உத்தரவை திரும்பப் பெற இந்து அமைப்புகள் போராட்டம்!

சபரிமலை புனிதம் காக்க, 144 தடை உத்தரவை திரும்பப் பெற இந்து அமைப்புகள் போராட்டம்!

in News / Local

ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்பதை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று சமீபத்தில் வெளிவந்த உச்சநீதிமன்றம் தீர்ப்பை அடுத்து சில பெண்கள் சபரி மலைக்குச் செல்ல முயன்று பின்னர் பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திரும்ப அனுப்பப்பட்டனர். இந்நிலையில் இந்த தீர்ப்புக்கு ஐயப்ப பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சபரிமலை புனிதம் காக்கப்பட வேண்டும், 144 தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி,காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரை ஆயிரக்கணக்கானோர் ஜோதி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பத்தினருடன் கையில் தீபம் ஏந்தி நின்று சரண கோஷம் எழுப்பினர். போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ஐயப்ப ஜோதி நிகழ்ச்சி நடந்தது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top