அனுமதியின்றி இயங்கும் கேரள வாகனங்களை தடை செய்ய கோரி ஆர்ப்பாட்டம்!

அனுமதியின்றி இயங்கும் கேரள வாகனங்களை தடை செய்ய கோரி ஆர்ப்பாட்டம்!

in News / Local

குமரி மாவட் டத்தில் அனுமதியின்றி இயங்கும் கேரள பதிவு எண் வாகனங்களால் தமிழக மேக்ஸி கேப் வாகனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக கூறி மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் கடந்த ஒரு வாரத்துக்கு முன் ஏஐ.சி.சி.டி யு தொழில் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடு பட்டனர். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில், சம்பந்தப்பட்ட வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரியால் உறு தியளிக்கப்பட்டது.

இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் அவை வழக்கம் போல் இயக்கப்பட்டு வருவதாக கூறி நேற்று மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் ஏ.ஐ.சி.சி.டியு தொழில் சங்கத்தினர் திடீர் போராட்டத்தில் ஈடு பட்டனர். குளச்சல் ஏ.ஐ.சி.சி.டி. யு தொழில் சங்க தலைவர் ராஜ்கு மார், செயலாளர் மரிய ஆன்டனி, பொருளாளர் சகாய ஆன்டனி, மாநில துணை தலைவர் அந்தோணிமுத்து மாவட்ட பொது செயலாளர் ஜாண்சன் உள்ளிட் டவர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top