மூன்று நாள் தேர்தல் பிரச்சாரத்திற்கு ராகுல் காந்தி இன்று கோவை வருகை

மூன்று நாள் தேர்தல் பிரச்சாரத்திற்கு ராகுல் காந்தி இன்று கோவை வருகை

in News / Local

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கோவை, திருப்பூர்,கரூர் மாவட்டங்களில் மூன்று நாட்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதன்படி இன்று காலை 8: 15 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்படும் ராகுல்காந்தி கோவை விமான நிலையத்திற்கு 11 மணிக்கு வந்தடைகிறார். 11:30 மணிக்கு ஏர்போர்ட் சித்ரா காள ப்பட்டி பிரிவில் உற்சாக வரவேற்பு கட்சியினரால் அளிக்கப்படுகிறது. தொடர்ந்து காளப்பட்டி சாலையிலுள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் சிறு மற்றும் குறு தொழில் அதிபர்களை சந்தித்து உரையாடுகிறார். பின்னர் மதிய உணவை அங்கே எடுத்துக் கொள்ளும் ராகுல்காந்தி பிரச்சார பயணத்தை துவக்குகிறார்.

முதல் பிரச்சாரமாக மதியம் 2 15 மணிக்கு சின்னியம்பாளையம் சந்திப்பில் பிரச்சாரம் செய்கிறார். தொடர்ந்து 3:30 மணிக்கு திருப்பூர் மாவட்டம் அவிநாசி பஸ் ஸ்டாண்ட் பகுதியிலும் 4 :10 மணிக்கு அனுப்பர்பாளையம் பகுதியிலும் பிரச்சாரம் செய்கிறார். தொடர்ந்து மாலை 5 மணிக்கு திருப்பூரில் உள்ள திருப்பூர் குமரன் நினைவு இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்துகிறார். மாலை 6 மணிக்கு திருப்பூரில் உள்ள தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்துகிறார். பின்னர் இரவு திருப்பூரில் உள்ள பொதுப்பணித்துறை கெஸ்ட் ஹவுசில் தங்குகிறார். காலை 10 மணிக்கு புறப்படும் அவர் ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளியில் அளிக்கப்படும் வரவேற்பில் கலந்து கொள்கிறார்.

தொடர்ந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கட்சியினர் வரவேற்பில் கலந்து கொண்டு அங்கு பிரச்சாரம் மேற்கொள்கிறார்  மதியம் 12:30 மணிக்கு  ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் பகுதியிலும்   பிரச்சாரம் மேற்கொள்கிறார்.  மதியம்  2 மணி அளவில்  ஓடாநிலையில் உள்ள  தீரன் சின்னமலையின் நினைவிடத்திற்கு சென்று அவருக்கு மரியாதை செலுத்துகிறார்.  பின்னர் நெசவாளர்கள் உடன் கலந்துரையாடல் நிகழ்த்திவிட்டு மதிய உணவை மேற்கொள்கிறார். மாலை 4 மணிக்கு திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 5 மணிக்கு தாராபுரம் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் தாராபுரம் பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் இரவு தங்குகிறார். மறுநாள் 25ஆம் தேதி காலை 10 மணிக்கு தாராபுரத்தில் இருந்து புறப்படும் அவர் கரூர் மாவட்டம் சின்ன தாராபுரத்தில் கட்சியினர் வரவேற்பில் கலந்து கொள்கிறார். பின்னர் அதே பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.


பின்னர் 11 மணி அளவில் கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள காமராஜர் சிலை பகுதியில் அளிக்கப்படும் வரவேற்பில் கலந்து கொண்டு பிரச்சாரம் மேற்கொள்கிறார். மதியம் 12:30 மணிக்கு கரூர் மாரி கவுண்டம்பாளையத்தில் உள்ள மண்டபத்தில் விவசாயிகளுடன் உரை நிகழ்த்துகிறார். பின்னர் கரூர் பகுதியில் ஐந்து ரோடு பகுதியில் உள்ள மண்பானை சமையல் உணவகத்தில் மதிய உணவை மேற்கொள்கிறார். தொடர்ந்து மாலை கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளும் அவர் மாலை 4:30 மணி அளவில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியில் கட்சியினர் வரவேற்பில் கலந்து கொண்டு பின்னர் மதுரை விமான நிலையத்தை சென்றடைகிறார். மாலை 6 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் தில்லி சென்றடைகிறார். ராகுல் காந்தியின் பிரச்சார பயணம் குறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top