நாகர்கோவிலில் மழை

in News / Local

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நாகர்கோவில் பகுதியில் இன்று காலை வெயில் அடித்தது. மாலை நேரத்தில் மழை கொட்ட தொடங்கியது. அது மெல்ல, மெல்ல தீவிரம் அடைந்தது. அப்போது இடியும் மின்னலும் காணப்பட்டது.

இம்மழை காரணமாக நாகர்கோவில் நகரில் மீனாட்சிபுரம் சாலை, மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை, கோட்டார், செட்டிக்குளம் சாலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் இருச்சக்கர வாகன ஓட்டிகள் சிக்கி தவித்தனர். கனரக வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டப்படி மழை வெள்ளத்தில் மிதந்து சென்றது.

மழை வெள்ளத்தில் சிக்கி பல வாகனங்கள் நடுரோட்டில் நின்று நின்று சென்றன . இதனால் நகரின் பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.பள்ளி முடித்துச் செல்லும் மாணவர்கள் மழையில் நனைந்து விளையாடியபடி சென்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top