தஞ்சை பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா தொடங்கியது

தஞ்சை பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா தொடங்கியது

in News / Local

தஞ்சை பெரிய கோவில் என அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவிலை மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டி எழுப்பினார். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் என்ற பெருமையுடன் இன்றும் நிலைத்து நின்று அவரது புகழை எடுத்துரைக்கிறது.

தஞ்சை பகுதியை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழனின் 1034வது சதய விழா நாளை கோலாகலமுடன் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு தஞ்சையில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விடுமுறையை அடுத்து, நவம்பர் 6ந்தேதிக்கு பதிலாக நவம்பர் 23ந்தேதி மாற்று வேலைநாளாக செயல்படும் என்று அந்த மாவட்டத்தின் ஆட்சியர் அண்ணாதுரை அறிவித்து உள்ளார்.

இந்த நிலையில், தஞ்சை பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா மங்கள இசையுடன் இன்று தொடங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து சிலைக்கு மாலை அணிவிப்பு மற்றும் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நாளை நடைபெறும்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top