கொல்லங்கோடு அருகே மார்த்தாண்டன்துறை மீனவ கிராமத்தில் கடலரிப்பினால் மார்த்தாண்டன் துறை ஆலயம் மற்றும் கல்லறை தோட்டங்கள் கடலுக்குள் இழுத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கிராம மக்கள் இவற்றை பாதுகாக்க வேண்டி அலை தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் மார்த்தாண்டன்துறை ஆலயம் முன் 120 மீட்டர் நீளத்துக்கு அலை தடுப்பு சுவர் அமைக்க ரூ.70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நேற்று தொடங்கியது. இந்த பணியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மீனவர்கள் தங்களுக்கு மீன்பிடிக்க செல்ல பாதிப்பு ஏற்படாத வகையில் அலை தடுப்பு சுவரை அமைத்து தருமாறு கேட்டுக்கொண்டனர்.
ஆய்வின் போது கடலரிப்பு தடுப்பு பிரிவு உதவி பொறியாளர் சாலமன் சுரேஷ், மார்த்தாண்டன்துறை பங்குதந்தை அசிஸி, வட்டார தலைவர் கிறிஸ்டோபர் உள்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் மீனவ பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்.
0 Comments