கன்னியாகுமரி:
தூய்மை பணியாளர்களுக்கு அரிசி பருப்பு தொகுப்புடன் கூடிய நிவாரண பொருட்களை வட்டார வளர்ச்சி அலுவலர் வழங்கினார்.
கொரோனா இரண்டாம் நிலை பரவலை கட்டுபடுத்த தமிழக அரசு முழு ஊரங்கு பிறப்பித்து , கடந்த இரண்டு வாரமாக அமல்படுத்தி வருகிறது.இந்நிலையில் குமரி மாவட்டம் கரும்பாட்டூர் ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு இன்று அரிசி, பருப்பு ,காய்கறிகளுடன் கூடிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
இதை அகஸ்தீஸ்வரம் வட்டார வளர்ச்சி அலுவலர் இங்கர்சால் பணியாளர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சிக்கு கரூம்பாட்டூர் ஊராட்சி மன்ற தலைவி தங்கமலர் சிவபெருமான் தலைமை வகித்தார் .இதில் ஊராட்சி செயலாளர் காளியப்பன் கலந்து கொண்டார்.
0 Comments