வெளிநாட்டில் மாயமாகும் மீனவர்களை மீட்க தூதரக தொடர்பு அலுவலகம் : வசந்தகுமார் எம்.பி. தகவல்

வெளிநாட்டில் மாயமாகும் மீனவர்களை மீட்க தூதரக தொடர்பு அலுவலகம் : வசந்தகுமார் எம்.பி. தகவல்

in News / Local

மீனவர்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்ற கூட்டத்தில் பதிவு செய்துள்ளேன். குமரி மாவட்ட மீனவர்கள் சுனாமி பேரலை, ஒகி புயல் போன்ற பல இயற்கை பேரிடர்களால் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

மீனவர்களை பாதுகாக்க காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும். ஆழ்கடலில் மாயமாகும் மீனவர்களை மீட்க கப்பல்கள், ஹெலிகாப்டர் வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன். பேரிடர் காலத்தில் மீனவர்கள் தகவல் மற்றும் உதவிகளை பெற செயற்கைகோள் தொலைபேசி வழங்க வேண்டும் என கேட்டு வருகின்றனர். இதனையும் நான் மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்துவேன்.

மீன்பிடிக்க செல்லும் போது, வெளிநாட்டு கடலில் மாயமாகும் மீனவர்களை மீட்க தூதரகத்தை தொடர்பு கொள்ள டெல்லியில் காங்கிரஸ் சார்பில் தூதரக தொடர்பு அலுவலகம் ஓன்று விரைவில் தொடங்கப்படும். குமரி மாவட்டத்தில் சாலைகள் அனைத்தும் பழுதடைந்துள்ளன. இதனை சீரமைக்க காங்கிரஸ் போராட்டம் அறிவித்துள்ளது. குமாரகோவில், நூருல் இஸ்லாம் கல்லூரியில் அடுத்த மாதம் (டிசம்பர்) 5–ந் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு காங்கிரஸ் சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

நிகழ்ச்சியில், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் டைட்டஸ், ஆஸ்கர் பிரடி, கிள்ளியூர் வட்டார தலைவர் டென்னீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top