ஓவர்லோடு வாகனங்களால் சாலைகள் சேதம்!

ஓவர்லோடு வாகனங்களால் சாலைகள் சேதம்!

in News / Local

தமிழக - கேரள எல்லையில் குமரி மாவட்டம் அமைந்துள்ளதால் உள்ளூர் வாகனங்கள் மட்டுமல்லாமல், வெளி மாநில வாகனங்கள், சரக்குகனரக வாகனங்கள் அதிகளவில் சென்றுவருகின்றன. குறிப்பாக லாரிகள் மூலம் செங்கல், ஜல்லி, கற்கள், கால்நடைகள், காய்கறிகள், வைக்கோல் உட்பட பல பொருட்கள் இவ்வழியாக கேரளாவுக்கு அதிகளவில் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

மாவட்ட சாலைகளில் 45 டன்னுக்கும் மேல் பாரம் ஏற்றி வரும் லாரிகளும் பயணிக்கின்றன. இத்தகைய ஓவர்-லோடு வாகனங்களால் சாலைகள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. செக்-போஸ்ட்களில் போலீசார் இந்த வாகனங்களை கண்டு கொள்வதில்லை. மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அதிகாரிகளின் சோதனையின்போது சில ஓவர்-லோடுவாகனங்கள் பிடிபட்டாலும், தொடர்ந்து சாலைகளில் இதுபோன்ற வாகனங் கள் சகஜமாக இயங்கி வருவதை காணலாம். எனவே பொது நலன்கருதி அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் இது தொடர்பாக சமூக ஆர்வலர் சுரேஷ் பிரகாஷ் அரசுக்கு மனு அனுப்பி உள்ளார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top