நாகர்கோவில் பல்வேறு இடங்களில் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது!

நாகர்கோவில் பல்வேறு இடங்களில் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது!

in News / Local

தமிழக போக்குவரத்துத்துறை மற்றும் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா கல்லூரி நூற்றாண்டு மண்டபத்தில் நேற்று நடந்தது. அதில் சாலை விதிகளை பின்பற்றுவதில் அவசியம் குறித்தும், தலைக்கவசம் அணிவதில் அவசியம் குறித்தான விழிப்புணர்ச்சி குறித்து நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலர் கே.பழனிசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் கே.உலகநாதன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இன்று காலை அதே போல் கிராஸ் சேவை மற்றும் மருத்துவக்கல்வி நிறுவனங்கள், நாகர்கோயில் போக்குவரத்துக்கு காவல்துறையுடன் இனைந்து பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வடசேரி பேருந்து நிலையத்தில் நடத்தினர். இந்நிகழ்ச்சியில் கிராஸ் மருத்துவக்கல்வி மாணவ, மாணவிகள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் மேலும் கன்னியாகுமாரி மாவட்டம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா எஸ்.எல்.பி பள்ளிக்கூடத்தில் வைத்து நடந்தது. இந்த சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சியிலும் விமன்ஸ் கிறிஸ்டியன் கல்லூரி மாணவிகள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

 

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top