குழித்துறை அருகே தனியார் நிறுவனத்தில் 1 லட்சம் திருட்டு!

குழித்துறை அருகே தனியார் நிறுவனத்தில் 1 லட்சம் திருட்டு!

in News / Local

குழித்துறை அருகே தேவகோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜாண் ஜேக்கப்(45). குழித்துறை தீயணைப்பு நிலையம் அருகில் வருமானவரி மற்றும் இதரவரிகளை தணிக்கை செய்யும் அலுவலகத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு வழக்கம் போல பணியாளர்கள் அலுவலகத்தை பூட்டி சென்றனர். நேற்று காலை அலுவலகத்தை திறக்க பணியாளர்கள் வந்தபோது அலுவலகத்தின் முன்பக்க கதவு உடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.. உள்ளே சென்று பார்த்த போது பொருட் கள் அங்கங்கே சிதறி கிடந்தன.

இது பற்றி தகவல் அறிந்த உரிமையாளர் ஜாண் ஜேக்கப் அங்கு வந்து பார்த்தார். அப்போது மேஜை அறையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1 லட்சம் மற்றும் லேப்டாப், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களும் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது பற்றி ஜாண் ஜேக்கப் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடம் வந்து தடயங்களை சேகரித்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top