குழந்தை சுஜித் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் அறிவிப்பு

குழந்தை சுஜித் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் அறிவிப்பு

in News / Local

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த 2 வயது குழந்தை சுஜித் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித் குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். வீட்டில் வைக்கப்பட்டுள்ள சுஜித்தின் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். இதையடுத்து, குழந்தை சுஜித்தின் இல்லத்தில் பெற்றோரை சந்தித்து முதலமைச்சர் பழனிசாமி ஆறுதல் கூறினார்.

இதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர், ‘தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி குழந்தை சுஜித்தை உயிரோடு மீட்க விடாமுயற்சி செய்தோம். ஆனாலும், மீட்புக் குழுவின் முயற்சி பலனளிக்காமல் போனதால் குழந்தை உயிரிழந்தது. இரவு, பகல் பாராமல், மழையை பொருட்படுத்தாமல் மீட்புப் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். எல்லாம் தெரிந்த விஞ்ஞானி போல் பேசும் மு.க.ஸ்டாலின், அரசின் மீது குற்றம் சுமத்த வேண்டுமென்று பொய் சொல்லி வருகிறார்’ என்றார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், ‘2009ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது தேனியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுவன் உயிரிழந்தான். அப்போது திமுக ஏன் ராணுவத்தை அணுகவில்லை? எனக் கேள்வி எழுப்பிய முதலமைச்சர், அனைவரையும் மீட்பதுதான் அரசின் எண்ணம்; கொஞ்சம் மனசாட்சியோடு எண்ணிப்பார்க்க வேண்டும். அரசை குறை கூறுவதுதான் ஸ்டாலினின் நோக்கம்; மக்களின் குறைகளை போக்குவதுதான் அரசின் நோக்கம்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ.10 லட்சமும், அதிமுக சார்பில் ரூ.10 லட்சமும் வழங்கப்படும்’ என்றும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top