கன்னியாகுமரி:
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.85 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார் .
குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோவிலின் மேற்கூரைகள் எரிந்து சேதமடைந்தது. தொடர்ந்து அப்பகுதிகளை இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் இன்று மீண்டும் கோவில் மேற்கூரை சீரமைக்கும் பணிகளை ஆய்வு செய்த இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தனர்
.பின்னர் அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது ;
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் காலதாமதமின்றி தீயணைப்பு துறை வீரர்களுடன் இணைந்து பக்தர்கள் அனணைத்ததால் பெரிய அளவிலான பாதிப்பிலிருந்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்து குறித்து முதலமைச்சர் அவர்கள் கேள்விப்பட்டவுடன் கோவிலின் புனரமைப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தார்.
அதனடிப்படையில் தற்காலிகமாக பிளாஸ்டிக் தார் பாலினால் மேற்கூரை அமைக்கும் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேலும் பக்தர்கள் ,நாடாளுமன்ற ,சட்டமன்ற உறுப்பினர்கள் தேவ பிரசன்னம் பார்க்க வேண்டும் என்றும் ஆகம விதிகளின்படி இந்த திருக்கோயில் ஏற்கனவே எப்படி இருந்ததோ அதேபோல் கட்டித்தர வேண்டுமென்ற கோரிக்கையை முதலமைச்சருக்கு விடுத்தனர் .
அவர்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதனடிப்படையில் தேவ பிரசவத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இன்றும் நாளையும் தேவப்பிரசன்னம் தொடர்ந்து நடைபெற உள்ளது .அந்த தேவ பிரசன்னத்தில் எடுத்துரைக்கப்படுகின்ற கருத்துக்களின் அடிப்படையில் என்னென்ன பணிகள் எல்லாம் உடனடியாக மேற்கொண்டு முடிக்க முடியும் எவை எவை சாத்தியமாக இருக்கின்றதோ அனைத்து பணிகளையும் மாவட்ட ஆட்சியர் இந்து சமய அறநிலைத்துறையினரோடு இணைந்து அப்பணிகளை தேவப்பிரசன்னம் பார்த்து ஆகம விதிகளின் படியும் அனைத்து பக்தர்களின் மனம் புண்படாத படியும் மேற்கூரை அமைக்கப்படும் .
முதலமைச்சர் அவர்கள் திருக்கோயில் சேதமடைந்த மூலஸ்தானம் மேற்கூரையை பழமை மாறாமல் புதுப்பித்து ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார்கள். மேலும் ரூ.10 லட்சம் மதிப்பில் திருக்கோயில் கருவறையை சீலிங் மற்றும் சுற்றுப் பிரகாரம் சீர் செய்யவும், ரூ.6 லட்சம் மதிப்பில் தீ தடுப்பு உபகரணங்கள் மற்றும் நீர் தும்பிகள் அமைத்திடவும், ரூ.5 லட்சம் மதிப்பில் கருவறை உட்பகுதி பலத்தினை சீரமைக்கவும், ரூ .5 லட்சம் மதிப்பில் கருவறை சுவர் மரச் சட்டங்களில் செம்புவலை அமைத்திடவும், ரூ 3 லட்சம் மதிப்பில் கருவறை தீ பாதுகாப்பு கம்பி வலை அமைத்திடவும், ரூ.6 லட்சம் மதிப்பில் சுற்றுப்புற மண்டபம் பழுதுபார்த்து புதுப்பிக்கவும் மொத்தம் ரூ.85 லட்சம் முதல் கட்டமாக பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ,இந்து அறநிலைத் துறை ஆணையர் குமரகுருபரன் ,எம்.எல்.ஏ-க்கள் எம்.ஆர்.காந்தி ,பிரின்ஸ் , முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ,முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் சுரேஷ்ராஜன் ,ஆஸ்டின் ,திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் வக்கீல்.சிவராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
0 Comments