எஸ்.ஐ. வில்சன் கொலையில் தேடப்பட்டவர்கள் கைது

எஸ்.ஐ. வில்சன் கொலையில் தேடப்பட்டவர்கள் கைது

in News / Local

காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இருவரை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளராக வில்சன் என்பவர் பணியாற்றி வந்தார். வில்சன் பணியில் இருந்தபோது, அங்கு வந்த இரண்டு பேர் அவரைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கொலையில் ஈடுபட்டது தவுபீக், ஷமீம் என்ற இருவர் எனத் தெரியவந்தது. இந்நிலையில் இவர்களைப் பிடிக்க தமிழ்நாடு, கேரள போலீஸார் தனிப்படைகள் அமைத்துள்ளனர்.

விசாரணையில், வில்சனை சுட்டுக்கொல்ல பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, மும்பையில் இருந்து கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. மேலும், பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டு கொடுத்து உதவியதாக இதுவரை 9 பேரை தமிழக கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோர் கர்நாடகாவில் போலீசார் கைது செய்துள்ளனர். நேபாளம் செல்ல திட்டமிருந்த அவர்களை கர்நாடக போலீசார் உடுப்பியில் கைது செய்துள்ளனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top