கடலில் பாய்மர படகு போட்டி

கடலில் பாய்மர படகு போட்டி

in News / Local

கன்னியாகுமரி அருகே உள்ள கடலில் பாய்மர படகு போட்டி நடந்தது. கோவளத்தில் இருந்து இடிந்தகரையில் உள்ள தேழிப்பாமுனை கடற்கரை வரை 50 கிலோ மீட்டர் தூரத்துக்கு போட்டி நடத்தப்பட்டது. இதில் 15 படகுகள் கலந்து கொண்டன.

ஒரு படகில் 10 மீனவர்கள் இருந்தனர். கோவளம் கடற்கரையில் போட்டியை கோவளம் பங்குத்தந்தை பீட்டர் தாஸ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன், சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

 பரிசளிப்பு

காலை 10.30 மணிக்கு தொடங்கிய போட்டி மாலை 4 மணிக்கு முடிவடைந்தது. இதில் முதலிடம் பிடித்த இடிந்தகரையை சேர்ந்த ஜெயராஜ் படகுக்கு 1 பவுன் தங்கமும், 2-வது இடம் பிடித்த ஆனந்த் படகுக்கு ¾ பவுன் தங்கமும், 3 மற்றும் 4-வது இடத்தை பிடித்த செல்வன் மற்றும் ஜவகர் ஆகியோரது படகுக்கு தலா ½ பவுன் தங்கமும், 5-வது இடம் பிடித்த சதீப்ராஜா படகுக்கு வாஷிங்மிஷின் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை இடிந்தகரை கடற்கரை கிராமத்தை சேர்ந்த அன்றன், டைட்டஸ், இம்ரான் ஜூலியன், ஆகியோர் செய்து இருந்தனர்

 

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top