நாகர்கோவிலில் சந்தன மரக்கடத்தல் கும்பல் பிடிப்பட்டது.

நாகர்கோவிலில் சந்தன மரக்கடத்தல் கும்பல் பிடிப்பட்டது.

in News / Local

கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதிகளிலும், நகர பகுதிகள், அரசு அலுவலக வளாகங்களில் அண்மை காலமாக சந்தன மரங்கள் வெட்டி கடத்தல் அதிகரித்துள்ளது. வன பகுதிகளிலும் தேக்கு, கடம்பு உள்ளிட்ட பலவிதமான விலை உயர்ந்த மரங்கள் இயற்கையாகவே வளர்ந்து உள்ளன. இதனை கேரள மரக்கடத்தல் கும்பல்களுடன் சேர்ந்து, குமரி மாவட்டத்தை சேர்ந்த சிலர் மரங்களை வெட்டி கடத்தி வந்தனர். இவர்களை பிடிக்க தனி படை அமைத்தும், இதுவரை மரக்கடத்தல் காரர்கள் சிக்கவில்லை. ஒரு சில வாரங்களுக்கு முன் நாகர்கோவில் பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் நின்ற சந்தன மரத்தை ஒரு கும்பல் வெட்டி கடத்தியது.

இந்நிலையில் தகவலின் அடிப்படையில் நாகர்கோவில் பரமார்த்தலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், கேசவதிருப்பாபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜன், வாத்தியார்விளை பகுதியைச் சேர்ந்த துரை ஆகியோரை கோட்டார் போலீசார் பிடித்து விசாரணை செய்ததில், இவர்கள் அண்மையில் நாகர்கோவிலில் பத்திர பதிவு அலுவலக வளாகத்தில் சந்தன மரத்தை வெட்டி கடத்தியது தெரிய வந்து உள்ளது. மூன்று பேர்களையும் கோட்டார் போலீசார் இன்று கைது செய்து, கேரள மரக்கடத்தல் கும்பலுடன் இவர்களுக்கு தொடர்பு உண்டா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top