பள்ளி மாணவருக்கு அரிவாள் வெட்டு : குற்றவாளிகளை கைது செய்யக்கோரி தாயார் மனு!

பள்ளி மாணவருக்கு அரிவாள் வெட்டு : குற்றவாளிகளை கைது செய்யக்கோரி தாயார் மனு!

in News / Local

பள்ளி மாணவருக்கு அரிவாள் வெட்டு: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, மனுவை மாணவனின் தாயார் உதவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்தார்.

புதுக்கடை போலீஸ் சரகத்துக்குட்பட்ட பெரியவிளை கீழ்குளத்தை சேர்ந்தவர் சுமேஷ்குமார். அவரது மனைவி லைலா குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்தார். அதில் ‘எனது மகன் அபின் பிளஸ் -2 படித்து வருகிறான். அவனை முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டிய குற்றவாளிகளை இதுவரை கைது செய்யவில்லை. அவர்களை உடனே கைது செய்ய வேண்டும்’ என குறிப்பிட்டு உள்ளார்.

மனு கொடுப்பதற்கு லைலாவுடன் உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து, ஏ.ஐ.சி.சி.டி.யு. மாவட்ட தலைவர் சுசீலா ஆகியோரும் உடன் சென்று இருந்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top