தாடி வைத்திருந்தால் கொரோனாவா? அலறும் நெட்டிசன்கள்!

தாடி வைத்திருந்தால் கொரோனாவா? அலறும் நெட்டிசன்கள்!

in News / Local

உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முகமூடிகளை அணிந்து கொண்டு இருக்கின்றனர். இப்படியான ஒரு நிலையில் முகமூடிகளை அணியும் போது முகத்தில் தாடி இருக்கக் கூடாது என்று கருத்துச் சொல்லும் ஒரு புகைப்படம் சமூக வலைத் தளங்களில் அதிகமாகப் பகிரப் பட்டு வருகிறது.

தற்போது தாடி வைப்பது, கிருதா வைப்பது எல்லாம் ஒரு பேஷனாகி கொண்டு வருகிறது. ஒரு பார்டியில் உங்களுக்கு தாடி செம கெத்தான தோற்றத்தைக் தரலாம். ஆனால் கொரோனாவிடம் இதெல்லாம் வேலைக்கு ஆகாது.

அடர்ந்த தாடியை வைத்துக்கொண்டு முக மூடி அணியும் போது முகமூடியில் இறுக்கம் குறைந்து விடுகிறது. மேலும் ஓட்டை வழியாக காற்று உள்ளே நுழைவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே தாடி மற்றும் கிருதாவை குறைத்துக் கொள்ளுமாறு இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத் தளங்களில் அறிவுரை கூறிவருகிறது.

2017 இல் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தது. முகமூடிகள் எப்படி அணிய வேண்டும் என்பதை விளக்கும் விதமாக அந்தப் புகைப்படம் இருந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. 2017 வெளியான புகைப்படம் தான் தற்போது இணைய தளத்தில் அதிகம் உலா வருகிறது.

தாடி, பக்கவாட்டு முடி, மீசை போன்றவை சீல் செய்யும் இடத்தின் இறுக்கத்தைக் குறைத்து விடுகிறது. உலகம் முழுவதும் 81,164 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. மேலும், அல்ஜீரியா, ஆஸ்திரியா, குரோஷியா, பாகிஸ்தான், மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு புதிதாக தனது வருகையையும் பதிவு செய்திருக்கிறது கொரோனா.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் கொரோனா அவசரகால நிலை பிறப்பிக்கப் பட்டு இருக்கிறது. இந்த அவசரகால அறிவிப்பை ஒட்டி அமெரிக்காவில் தாடி எப்படி வைக்க வேண்டும் என்ற புகைப்படம் செம வைரலாகி இருக்கிறது.

இந்தப் புகைப் படத்தை பார்த்தவர்கள் ஹிட்லர் போல மீசை வைத்துக்கொள்வது தற்போது நல்லது எனக் கூறுகின்றனர். தாடி எப்படி வைக்க வேண்டும் என ஒரு புகைப்படத்துடன் ஒப்பிடுவது தவறான செயல் என்றாலும் தற்போதைக்கு இது அவசியமான ஒன்றாக மாறி இருக்கிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top