ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.3¼ லட்சம் பறிமுதல்

ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.3¼ லட்சம் பறிமுதல்

in News / Local

குமரியில் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

குளச்சல் பறக்கும் படை அதிகாரி நடேசன் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரதீப்குமார் மற்றும் ஏட்டு விவேகானந்தன் ஆகியோர் நேற்று இரும்பிலி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்து 205 இருந்தது. இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து தக்கலை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இதேபோல் குளச்சல் பறக்கும் படை தாசில்தார் திருவாளி தலைமையில் போலீசார் நேற்று காலை ஆலங்கோடு பகுதியில் வாகன சோதனையில்        ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கேரள பதிவெண் கொண்ட மோட்டார் சைக்கிள் வந்தது. அதிகாரிகள் அந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து தக்கலை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதன்மூலம் நேற்று ஒரே நாளில் ரூ.3¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top