கால்பந்து பயிற்சி முகாமிற்கான தேர்வு போட்டிகள் அண்ணா விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் 3 நடக்கிறது!

கால்பந்து பயிற்சி முகாமிற்கான தேர்வு போட்டிகள் அண்ணா விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் 3 நடக்கிறது!

in News / Local

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய குமரி மாவட்டடப் பிரிவின் மூலம் 2019ம் ஆண்டிற்கான 10 முதல் 14 வயதிற்குட்பட்டவர்களுக்கு கால்பந்து விள யாட்டில் திறமைகளைக் கண்டறிந்து 10 மாணவர்கள், 10 மாணவிகளுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயிற்சி முகாமிற்கான தேர்வுப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி அன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை நாகர்கோவில், அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது.

மாணவ, மாணவிகளின் வயதின் அடிப்படையில் உடற்திறன் தகுதித் தேர்வு நடத்தி, 10 மாணவர்கள், 10 மாணவிகள் என மொத்தம் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு மாவட்ட விளையாட்டரங்கத்தில் மாலை நேரங்களில் பயிற்சியளித்து, அவர்களுக்கு போக்குவரத்துப்படி மற்றும் சத்தான உணவு, விளையாட்டு சீருடை மற்றும் உள்ளூர் விளையாட்டுகளில் கலந்து கொள்வதற்கான பயணச் செலவு, நுழைவுக் கட்டணம் போன்றவை வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவிகள் கால்பந்து விளையாட்டில் தங்கள் திறமைகளை மேம்படுத்தி சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவில் பதக்கங்களை வெல்லும் நோக்கில் பயிற்சி அளிக் கப்படஉள்ளது. தேர்ந்தெ டுக்கப்படும் மாணவ, மாண வியர் விளையாட்டு விடுதி தேர்வுகள், அகாடமிகளில் பங்குபெற சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சி திட்டம் ஒரு மாதத்திற்கு 25 நாட்கள் வீதம் 6 மாதங்க ளுக்கு நடைபெறவுள்ளது.

எனவே தகுதியுள்ள வீரர், வீராங்கனைகள் அவர் களது பள்ளியில் படிக்கும் உண்மைச் சான் றிதழ் மற்றும் பிறப்பு சான் றிதழ் நகல்களோடு3.08.2019 அன்று காலை 8 மணிக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்திற்கு வரவேண்டும். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top