தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு!

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு!

in News / Local

கடல் வழியாக தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுப்பதற்காக நம் நாடு பாதுகாப்பு படையினரால் அடிக்கடி பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று கடல் வழியாக கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ‘சவுகாஜ்’ ஆபரேஷன் தொடங்கியது. இதில் குமரி மாவட்டத்தில் உள்ள 48 கடற்கரை கிராமங்களிலும் தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், இந்திய கடலோர காவல் படை போலீசாரும் சேர்ந்து அதிநவீன ரோந்து வாகனத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சோதனை வருகிற 17-ந் தேதி வரை நடக்கிறது. கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு சொந்தமான 4 விசைப்படகுகளும் பழுதானதால் சின்னமுட்டம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் படகுகள் மூலம் கடலுக்கு சென்று கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top