மருந்துவாழ் மலை அடிவாரத்தில் ஸ்ரீராம நவமி விழா.! தீப விளக்கு ஏற்றி பெண்கள் ஊர்வலம்;

மருந்துவாழ் மலை அடிவாரத்தில் ஸ்ரீராம நவமி விழா.! தீப விளக்கு ஏற்றி பெண்கள் ஊர்வலம்;

in News / Local

கன்னியாகுமரி அடுத்த பொற்றையடியில் ராமநவமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு மகாதீப விளக்கை ஏற்றி ஊர்வலமாக வந்தனர்.

ராம நவமியை முன்னிட்டு கொரானா தீவிரம் குறையவும், மக்கள் ஆரோக்கியமாக வாழவும் இறைவனை வேண்டி பெண்கள் தீப விளக்கு ஏற்றி பவனி வந்தனர்.கலப்பை மக்கதலைவர் பி.டி.செல்வகுமார் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பொற்றையடி வைகுண்டபதி மருந்துவாழ்மலை ஸ்ரீ நயினார் சாமி கோவிலில் நடைபெற்ற ஆனந்த் சிறப்பு பூஜைகளை நடத்தினார்.ஏராளமான பெண்கள் விளக்கு ஏந்தி கோவிலில் இருந்து புறப்பட்டு மலை அடிவாரம் வழியாக ஊர்வலமாக மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அங்கு சிறப்பு தீப வழிபாடுகள் நடைபெற்றன . பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top