குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி மர்ம நபர்களால் கத்தியால் குத்தியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக கொலையாளிகள் குமரி மாவட்டத்தை சேர்ந்த அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோரை கர்நாடகாவில் வைத்து போலீசார் கைது செய்தனர். அந்த வழக்கு தேசிய புலனாய்வு பிரிவான என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது.
பின்னர் அவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் 2 பேரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர்.
இந்த நிலையில் 2 பேரிடமும் மீண்டும் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் முடிவு செய்தனர். 2 பேரிடமும் வில்சன் கொலை வழக்கு தவிர மற்ற வழக்குகளில் அவர்களுக்கு உள்ள தொடர்பு மற்றும் அதில் தொடர்பு உள்ள நபர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.
0 Comments