உலகம் முழுவதும் கொரோனா படுத்தும் பாடு எல்லோரையும் கவலையில், பீதியில், பொருளாதார பிரச்சினைகளில் மூழ்கியிருக்கும் நேரத்தில், நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்த 26 வயதான காசி என்னும் இளைஞன், சுமார் 100 பெண்களின் வாழ்க்கையை பாலியல் ரீதியாக சூறையாடியாது மட்டும் இல்லாமல், அவர்களிடம் பெருமளவில் பணம் பறித்து மோசடி செய்துள்ளார்.
சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உள்பட இருவர் தைரியமாக முன்வந்து அளித்த புகாரின் பெயரில் மூன்று வழக்குகள் இவன் மீது பதிவு செய்த போலீசார், காசியையம் அவனது கூட்டாளியையும் . கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காசியோடு இந்த அயோக்கியத்தனத்தில் இன்னும் பலருக்கு தொடர்பு உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. இந்த வழக்கு விசாரணை முறையாக நடைபெற்று இந்த அயோக்கியத்தனத்தில் காசியுடன் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். காசி யுடன் இந்த அயோக்கியத்தனத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமெனில் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் தைரியமாக புகார் அளிக்க வேண்டும், அவர்களுக்கு அவர்களுடைய குடும்பத்தினர் உறுதுணையாக இருக்க வேண்டும். மேலும், இந்த குற்றத்தில் ஈடுபட்ட அயோக்கியர்கள் அனைவரும் தண்டிக்கப்படவும், இதுபோன்ற அயோக்கியத்தனங்கள் மேலும் நடைபெறாமல் இருக்கவும் காசி உள்ளிட்ட அயோக்கியர்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் வழக்கு கட்டணம் வாங்காமல் அனைத்து விதத்திலும் சட்ட உதவி செய்ய தயாராக இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுடைய பெயர் முகவரி உள்ளிட்ட அடையாளங்கள் வெளியே தெரிய வேண்டாம் என்று கருதினால் அது குறித்த ரகசியம் காக்கப்படும்.
மேலும் இந்த வழக்கு விசாரணை முறையாக நடை பெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்றால் ஆரம்பம் முதல் இறுதிவரை இந்த வழக்கு விசாரணை நேர்மையான இயக்கங்கள், நேர்மையான வழக்கறிஞர்கள், நேர்மையான பத்திரிக்கையாளர்கள், உள்ளிட்ட பலராலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்று நாகர்கோவில், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் க. சிவராஜ பூபதி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே, வெளிநாட்டில் இருக்கும் அவரது நண்பரை கைது செய்யும் முயற்சியை கன்னியாகுமரி போலீசார் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்வதாக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, வெளிநாட்டில் இருக்கும் காசியின் நண்பரை கைது செய்யும் முயற்சியை கன்னியாகுமரி போலீசார் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்வதாக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
0 Comments