தக்கலை அருகே தாய், மகன் மீது தாக்குதல்!

தக்கலை அருகே தாய், மகன் மீது தாக்குதல்!

in News / Local

தக்கலை அருகே உள்ள மருதூர்குறிச்சி நெல்லிக்காவிளையை சேர்ந்தவர் ஜினுராஜ்(33). இவரது நண்பர் மகேஷ் என்பவருக்கும், அப்பகுதியை சேர்ந்த செலின், வைஸ்வின் ஆகியோருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் சேர்ந்து ஜினுராஜை அடித்து உதைத்ததுடன், அவரது தாய் ராஜேஸ்வரியையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த இருவரும் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜினுராஜ் அளித்த புகாரின் பேரில்செலின், வைஸ்வின்ஆகிய இருவர் மீதும் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top