மார்த்தாண்டம் அருகே செலவிற்கு பணம் கொடுக்காததால் தாயை கத்தியால் குத்திய மகன்!

மார்த்தாண்டம் அருகே செலவிற்கு பணம் கொடுக்காததால் தாயை கத்தியால் குத்திய மகன்!

in News / Local

மார்த்தாண்டம் அருகே நட்டாலம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ், கூலி தொழிலாளி. இவரது மனைவி சிசிலெட் (56), முந்திரி ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு ஒருமகன், மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. மகன் ஜோஸ் (29)க்கு இன்னும் திருமணமாகவில்லை.

அடிக்கடி தாயாரிடம் பணம் கேட்டு ஜோஸ் தகராறு செய்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை சிசிலெட் வீட் டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப் போது ஜோஸ் தாயாரிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். தாயார் தன்னிடம் பணம் இல்லை என கூறி உள்ளார். இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜோஸ் கத்தியால் சிசிலெட்டை குத்தியுள்ளார், " மொத்தம் 12 இடங்களில் கத்திக்குத்து விழுந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த சிசிலெட் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஜோஸை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top