சூரனை வதைத்த சூரசம்ஹாரம் முருகன் கோவில்களில் கொண்டாட்டம்

in News / Local

முருகன் கோவில்களில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான‌ கந்தசஷ்டி திருவிழா கடந்த 8-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

சூரனை வதைத்த சூரசம்ஹாரம் முருகன் கோவில்களில் கொண்டாட்டம்

தொடர்ந்து திரளான பக்தர்கள் கோவிலில் விரதம் இருந்து வழிபட்டு வருகின்றனர். முருகப்பெருமான் தன்னுடைய வேல் கொண்டு சூரனை சம்ஹாரம் செய்ததை பக்தர்கள் கந்தசஷ்டி விழாவாக கோவில்களில் கொண்டாடுகின்றனர். விழாவின் முக்கிய சிறப்பு சூரசம்ஹார நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் வெகு விமரிசையாக நடந்து வருகிறது.

சூரனை வதைத்த சூரசம்ஹாரம் முருகன் கோவில்களில் கொண்டாட்டம்

முருகனுக்கு, பார்வதி தன்னுடைய சக்தி மிகுந்த வேலைக் கொடுக்க, சூரபதுமனுக்கு எதிரான போருக்கு முருகன் புறப்பட்டார். திருச்செந்தூரில் தன் படைகளை ஒருங்கிணைத்தார் . பார்வதியின் பாத சிலம்பில் இருந்து தோன்றிய நவசக்தியர்களிடம் இருந்து நவ வீரர்களான வீரபாகு, வீரகேசரி, வீர மகேந்திரர், வீர மகேசுவரர், வீர புரந்தரர், வீராக்கதர், வீர மார்த்தாண்டர், வீராந்தகர், வீர தீரர் மற்றும் லட்சம் வீரர்களும் தோன்றி முருகனின் படைத் தளபதிகளாக விளங்கினர். சூரபதுமனையும் அவனுடன் சேர்ந்த அசுரர்களையும் அழித்து தேவேந்திரனுக்கு பட்டாபிஷேகம் செய்து தர்மத்தை நிலைநாட்ட புறப்படுவாயாக என்று கந்தனுக்கு, சிவபெருமான் அன்பு கட்டளையிட்டார்.

சூரனை வதைத்த சூரசம்ஹாரம் முருகன் கோவில்களில் கொண்டாட்டம்

சூரபதுமனின் தம்பியாகிய தாரகாசூரனை சம்ஹாரம் செய்து அவன் மார்பில் அணிந்திருந்த திருமாலின் சக்ராயுதமாகிய செம்பொன் பதக்கத்தை முருகன் பெற்றார். முருகப்பெருமானின் படைகள் ஏழு கடல்களையும் கலக்கி ஆரவாரத்துடன் புறப்பட்டனர். சூரபதுமன் மகன் பானுகோபன் புறப்பட்டு வந்து முருகப்பெருமான் படையோடு போரிட்டு படுதோல்வி அடைந்து ஓடினான். 3-ம் நாள் போரில் பானுகோபன் கொல்லப்பட்டான்.

சூரனை வதைத்த சூரசம்ஹாரம் முருகன் கோவில்களில் கொண்டாட்டம்

அடுத்து சிங்கமுகா சூரன் போர்க்களம் வந்தான். ஆனால் முருகபெருமானின் வேல், சிங்கமுகாசூரனை சம்ஹாரம் செய்து அவனும் கொல்லப்பட்டான். அடுத்து சூரபதுமன் தலைமை அமைச்சர் தருமகோபன், சூரபதுமன் மக்கள் மூவாயிரம் பேரும் கொல்லப்பட்டனர். முடிவில் எஞ்சி நின்றது சூரபதுமன் மட்டும் . பெரும் படையுடன் சூரபதுமன் போருக்கு வந்தான். மிக அற்புதமாக மாயப் போரிட்டான் . முருகனது வேலில் இருந்து தப்பிக்க மிருகங்கள், பறவைகள், மரங்கள் என மாறி மாறி மாயத்தால் தப்பினான். முருகனின் வேல் சூரபதுமனை தேடிச் சென்று, செந்தூர் அருகே உள்ள மரப்பாடு என்ற மாந்தோப்பில் சூரபதுமன் மறைந்த மாமரத்தை இருகூறாக பிரித்தது. சூரபதுமன் ஆணவமும், அகங்காரமும் ஒழிந்து, இரண்டும் சேவலாகவும், மயிலாகவும் மாறியது.இந்நிகழ்வை நினைவு கூறும் விதமாக ஆண்டு தோறும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி முருகன் கோவில்களில் நடைபெறுகிறது.

சூரனை வதைத்த சூரசம்ஹாரம் முருகன் கோவில்களில் கொண்டாட்டம்

கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள முக்கியமான முருகன் கோவில்களான குமாரகோவில், வெள்ளிமலை, மருங்கூர், தோவாளை என அனைத்து தளங்களிலும் சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று மாலையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. திரளான மக்கள் குவிந்து இந்த நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top