தென்மாவட்ட ஸ்பெஷல் காரா சேவு

தென்மாவட்ட ஸ்பெஷல் காரா சேவு

in News / Local

தமிழகத்தில்ஒவ்வொரு ஊரிலும் சிறப்பு பெற்ற திண்பண்டங்கள் கிடைக்கும் .தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் காரா சேவு என்பது மிக பிரபலம். அதிலும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் காராசேவு உலகப் புகழ் பெற்றது. இந்த சாத்தூர் சேவு 100 ஆண்டுகளுக்கு முன்பு தான் இங்கு முதன் முதலில் தயாரிக்கப்பட்டது என சொல்கிறார்கள். காரா சேவு மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப் பட்டு நூற்றாண்டைகடந்து விட்டது என்றே சொல்லலாம். இத்தனை ருசி மிகுந்த காரா சேவு சாத்துருக்கு சண்முக நாடார் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

காரா சேவில் , நயம் சேவு, சீரகச் சேவு, மிளகுச் சேவு, பட்டர் சேவு, இனிப்பு சேவு என இன்னும் பல வகை உண்டு. இத்தனை பிரபலமான சாத்தூர் காரா சேவு தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும், மற்ற மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளி நாடுகளுக்கும் அதிக அளவில் சாத்தூரில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. திருவிழாக் கால கடைகளில் அதிகமாக காரா சேவு சுடசுட தயார் செய்து விற்கப்படுகிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top