தங்கையுடன் ஆடு மேய்க்க சென்ற சிறுமி மாயம்

தங்கையுடன் ஆடு மேய்க்க சென்ற சிறுமி மாயம்

in News / Local

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே தங்கையுடன் ஆடு மேய்க்க சென்ற 9 வயது சிறுமி மாயமான நிலையில், அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வேண்டுராயபுரம் பகுதியில் வசித்து வருபவர்கள் கருப்பசாமி-ராஜலட்சுமி தம்பதி. இவர்களது 9 வயது மகள் வசந்த குருலட்சுமி அதேபகுதியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டிற்கு அருகே உள்ள பகுதியில் தனது தங்கையுடன் ஆடு மேய்க்கச் சென்றுள்ளார் வசந்த குருலட்சுமி. பின்னர் தங்கை மட்டும் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு வந்ததாக தெரிகிறது.

நீண்ட நேரம் ஆகியும் வசந்த குருலட்சும் வீட்டிற்கு வரவில்லை. சந்தேகமடைந்த பெற்றோர் சிறுமியை தேடிப்பார்த்துள்ளனர். கிடைக்கவில்லை என்றதும் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீயணைப்புத்துறை உதவியுடன் சிறுமியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top