காட்டாங்குளத்தூரில் உள்ள SRM கல்லூரியின் 15-வது மாடியில் இருந்து குதித்து கன்னியாகுமரியை சேர்ந்த மாணவர் தற்கொலை - போலீசார் விசாரணை!

காட்டாங்குளத்தூரில் உள்ள SRM கல்லூரியின் 15-வது மாடியில் இருந்து குதித்து கன்னியாகுமரியை சேர்ந்த மாணவர் தற்கொலை - போலீசார் விசாரணை!

in News / Local

சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியின், 15ஆவது மாடியில் இருந்து மாணவர் ஒருவர் குதித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரியைச் சேர்ந்த ஸ்ரீராகவ் என்ற மாணவர், காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரியில் பி.டெக் இறுதி ஆண்டு படித்து வந்தார். இளைய சகோதரர் மற்றும் சில நண்பர்களுடன் சேர்ந்து அறை வாடகைக்கு எடுத்து தங்கி அவர் படித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இன்று வழக்கம் போல் கல்லூரிக்குச் சென்ற ஸ்ரீராகவ், கல்லூரியின் 15ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து அங்கு சென்ற மறைமலைநகர் போலீசார் சடலத்தை மீட்டு, பிரேதபரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் தங்கியிருந்த அறையில் சோதனையிட்டதில் allam and thattu என்று எழுதி ஸ்ரீராகவ் கையொப்பமிட்ட கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

அந்த வார்த்தைகள் என்ன என்பது தொடர்பாகவும் இதற்கும் தற்கொலை முடிவுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு மாதத்திற்குள்ளாக அந்தக் கல்லூரியில் நடந்துள்ள மூன்றாவது தற்கொலைச் சம்பவம் என்பதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top