திருவட்டாறு கோயில் யானைஇடமிருந்து உயிர் தப்பிய தற்போதய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்!

திருவட்டாறு கோயில் யானைஇடமிருந்து உயிர் தப்பிய தற்போதய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்!

in News / Local

கேரள மாநில பி.ஜே.பி தலைவர்களில் ஒருவர் கிருஷ்ணகுமார். இவர் மத்திய அமைச்சராகவும் இருந்திருக்கிறார். இவரின் மகள் ஐஸ்வர்யா அமெரிக்காவில் படிக்கும்போது கபீர் சிங் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. பின்னர், அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

அவர்களது திருமணம், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் 2003-ம் ஆண்டு நடந்தது. ஐஸ்வர்யாவை திருமணம் செய்த கபீர்சிங், இப்போது இங்கிலாந்து பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பேரிஸ் ஜான்சனின் முதல் மனைவியின் உறவினர் ஆவார். எனவே, திருமணத்துக்கு பேரிஸ் ஜான்சன் தனது மனைவியுடன் திருமணத்தில் கலந்துகொண்டார். அப்போது இங்கிலாந்து எம்.பி-யாக இருந்தார் பேரிஸ் ஜான்சன்.

திருமணவிழா நடந்துகொண்டிருந்தபோது திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் யானை திடீரென மதம்பிடித்து ஓடியது. இதில் பலர் காயம் அடைந்தனர். அந்த தாக்குதலிலிருந்து பேரிஸ் ஜான்சன் மயிரிழையில் உயிர் தப்பினார். `யானையின் தாக்குதலில் இருந்து உயிர் தப்பியவருக்கு வாழ்வில் அதிஷ்டம் அடிக்கும்' எனப் பேரிஸ் ஜான்சனிடம் பி.ஜே.பி தலைவர் கிருஷ்ணகுமார் அப்போதே கூறியிருக்கிறார்.

இங்கிலாந்து சென்ற பேரிஸ் ஜான்சன் இந்தச் சம்பவம் குறித்து நகைச்சுவையாக எழுதியிருக்கிறார். இந்தநிலையில் பேரிஸ் ஜான்சன் இங்கிலாந்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து கேரள பி.ஜே.பி நிர்வாகி கிருஷ்ணகுமார், யானையிடம் இருந்து பேரிஸ் ஜான்சன் தப்பிப்பிழைத்த சம்பவங்களையும், அதனால்தான் அவருக்கு அதிஷ்டம் அடித்தது என்றும் மீடியாக்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top