புதிதாக தொழில் தொடங்க விரும்பும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு மானியம்!

புதிதாக தொழில் தொடங்க விரும்பும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு மானியம்!

in News / Local

முதல் தலைமுறையை சேர்ந்த பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு (டிப்ளமோ அல்லது ஐ.டிஐ.) மற்றும் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் தொழில் கல்வி குறைந்த பட்சம் 6 மாத கால படிப்பு முடித்த இளைஞர்களுக்கு புதிதாக தொழில் தொடங்க மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இத்திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் ரூ.2.35 கோடி மானியமாக வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனவே மானியம் பெற விருப்பம் உள்ள முதல் தலைமுறை தொழில்முனைவோர்கள் https://msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின் மூலம் 25 சதவீத மானியம் வழங்கப்படும். திட்ட மதிப்பீடு ரூ.10 லட்சத்திற்கு மேல் ரூ.5 கோடிக்கு மிகாமல் புதியதாக உற்பத்தி மற்றும் சேவை தொடர்பான தொழில் நிறுவனங்கள் தொடங்கலாம்.

பொதுப்பிரிவினர் திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதமும், மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகிய சிறப்பு பிரிவினர் திட்ட மதிப்பீட்டில் 5 சதவீதமும் விண்ணப்பதாரரின் சொந்த முதலீடாக செலுத்த வேண்டும். மகளிருக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

பொது பிரிவினராக இருப்பின் 21 வயதில் இருந்து 35 வயதிற்குள் விண்ணப்பிக்க வேண்டும். சிறப்பு பிரிவினர்கள் 21 வயது முதல் 41 வயது வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு நாகர்கோவில் கோணத்தில் உள்ள மாவட்ட தொழில் மைய பொதுமேலாளரை தொடர்பு கொள்ளலாம். தொழில் மைய அலுவலக தொலைபேசி எண் மூலமாகவும் (04652-260008) தொடர்பு கொள்ளலாம்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top