சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித்தை, சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
நாகர்கோவில் மாநகரை அழகுமிகு மாநகரமாக மாற்றி அமைத்திட வேண்டும். மாநகராட்சியில் உள்ள வலம்புரிவிளை குப்பை கிடங்கை உடனடியாக வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக நடைமுறைப்படுத்தப்படும் பாதாள சாக்கடை பணிகளில் அதிக கவனம் கொண்டு வேலைகளை துரிதப்படுத்தி, பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். குடிநீர் வினியோக முறையை ஒழுங்குபடுத்தி, பொதுமக்களுக்கு 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.
நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள சாலைகள் மிகமோசமாக உள்ளது. அதனை உடனே சீரமைக்க வேண்டும். முக்கடல் அணையை தூர்வாரி, தண்ணீர் கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும். புத்தன் அணை குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments