குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சல்: ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் 24 பேர் சிகிச்சை

குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சல்: ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் 24 பேர் சிகிச்சை

in News / Local

குமரி மாவட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்படுவோரில் பலர் பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். அதனால் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் பெரிதளவில் உள்ளது. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை பன்றிக்காய்ச்சல் சிறப்பு வார்டிலும் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

குமரி மாவட்டத்தில் இதுவரை பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 7 பேர் உயிரிழந்துள்ளார். ஆசாரிபள்ளம் மருத்துவமனை பன்றிக்காய்ச்சல் சிறப்பு வார்டில் நேற்றைய நிலவரப்படி 10 பெண்கள், 5 ஆண்கள், 5 பெண் குழந்தைகள், 4 ஆண் குழந்தைகள் என மொத்தம் 24 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் ஒரு ஆணும், பெண்ணும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top