கேரள முதல்வரின் காரை மறிக்க போராடிய தமிழ் பெண்!

கேரள முதல்வரின் காரை மறிக்க போராடிய தமிழ் பெண்!

in News / Local

கேரளா மூணாறு நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை பார்வையிட வந்த கேரள முதல்வர் பிரனாயி விஜயன் அவர்களின் காரை வாழி மறிக்க போராடிய தமிழ் பெண்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு ராஜமலை அருகே பெட்டிமுடி எஸ்டேட் பகுதியில் கடந்த 7 நாட்களுக்கு முன்பா நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வந்த 80-க்கும் மேற்பட்ட தமிழர்கள் தோட்ட தொழிலாளர்கள் மண்ணோடு மண்ணாக புதையுண்டனர்.

இறந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழக தூத்துக்குடி கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள் தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் கேரளா நிலச்சரிவு சம்பவத்திற்கு உதவ தயாராக இருப்பதாகவும்அதே நேரத்தில் உடனடியாக மீட்பு பணிகளை செய்ய வலியுறுத்தினர்..இந்த நிலையில் கேரள முதல்வர் பிரனாயி விஜயன் அவர்கள் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு ஒரு வாரம் கடந்தே பார்வையிட சென்றுள்ளார்..அவர் மூணாறு பகுதிக்குள் நேற்று வரும் வழியில் பரபரப்பு ஏற்பட்டது அதற்கு காரணம் ஒரு தமிழ் பெண்.

கோமதி நிலச்சரிவு ஏற்பட்ட பெட்டிமுடி பகுதிக்கு நேற்று சென்று திரும்பிய முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கவர்னர் ஆரிப்முகம்மதுகான் உட்பட அமைச்சர்களின் வாகனங்களை மூணாறில் வழி மறிக்க முயன்றார் உடனே போலீசார் தடுத்து குண்டு கட்டாக துாக்கிச் சென்று அப்புறப்படுத்தினர். அவர் மீது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் மொழி பிரச்னைகளை துாண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் கேரளா மட்டும் தமிழ் பேசும் மக்களிடமும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இந்த பிரச்சினை நடைபெற்று வருவது தெரிந்தும் கேரள அதிகாரிகளோ, முதல்வர்,கவர்னர் யாரும் இது பற்றி தெரிந்து கொள்ளாமல் சென்றதாக நேரில் பார்த்த மக்கள் வேதனை தெரிவித்தனர்.

கடந்த 2015 ல் நடைபெற்ற மூணாறில் தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்காக போராட்டத்திற்கு தேவிகுளத்தைச் சேர்ந்த கோமதி என்ற பெண் முன்னிலை வகித்தனர்.. அதன் பிறகு அவர் தலைமையில் பெண்கள் உரிமை எனும் அமைப்பு துவங்கப்பட்டு பல்வேறு காரணங்களால் செயல்படாமல் போனது . இதனிடையே அந்த அமைப்பு சார்பில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட கோமதி , தேவிகுளம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினரானார்.

இவர் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் . அவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி வரும் நிலையில் அவருக்கு எதிராக மூணாறு நிலச்சரிவு இடத்தை பார்வையிட வந்த கேரள முதல்வரின் காரை மறிக்க சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டதை போலீசார் தடுத்து அவர் மீது வழக்கும் பதிவு செய்துள்ளனர்…இந்த சம்பவத்திற்கு பல்வேறு அமைப்பினர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தும் வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top