தமிழகத்தை சேர்ந்த காவல்துறை ஆய்வாளருக்கு கேரளாவில் விருது!

தமிழகத்தை சேர்ந்த காவல்துறை ஆய்வாளருக்கு கேரளாவில் விருது!

in News / Local

கன்னியாகுமரியில் நடந்த சபரிமலை போராட்டத்தின்போது சிறப்பாக செயல்பட்ட தமிழகத்தை சேர்ந்த உதவி ஆய்வாளருக்கு கேரள அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது.

சபரிமலையில் இரண்டு பெண்கள் சாமி தரிசனம் மேற்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக கேரள எல்லை பகுதியான களியக்காவிளை பகுதியில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த கேரள அரசு பேருந்தையும், அதன் ஓட்டுநரையும் பாஜகவினர் தாக்க முயன்ற போது களியக்கவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளரான மோகன ஐயர் என்பவர், ஆக்ரோஷமாக கலவரக்காரர்களை மிரட்டி கலைத்தார்.

இது தொடர்பான செய்தி தமிழ் தனியார் தொலைக்காட்சியில் முதலில் வெளியானது. தொடர்ந்து அந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலானது. இந்நிலையில், கேரள பேருந்தை காப்பாற்றியதை பாராட்டி மோகன ஐயருக்கு அம்மாநில அரசு தச்சங்கிரி விருதும், ஆயிரம் ரூபாய் பரிசும் வழங்கி கவுரவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top