குமரி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் ஊழியர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்!

குமரி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் ஊழியர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்!

in News / Local

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனையாளரை கொன்று பணம் கொள்ளையடிக்கப்பட்டசம்பவம் டாஸ்மாக் ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் குமரி மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கங்களின் சார்பில் செண்பகராமன்புதூரில் உள்ள மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலக வளாகத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்..

இதில் ஏராளமான ஊழியர்கள் திரண்டு கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் டாஸ்மாக் ஊழியர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும், படுகொலை செய்யப்பட்ட ஊழியர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முருகன், நடேசன், பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தால் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் இருந்து மற்ற கடைகளுக்கு மதுபாட்டில்கள் வினியோகம் செய்ய முடியவில்லை. இதனால் லாரிகளில் ஏற்றப்பட்ட மதுபாட்டில்கள் அங்கேயே இருந்தன. மேலும் ஊழியர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த போராட்டக்காரர்கள் மதியம் 3 மணிக்கு பிறகு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top