ராஜாக்கமங்கலத்தை அடுத்த ஆலங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சுரேன் (வயது 38), வெல்டிங் தொழிலாளி. நேற்று முன்தினம் இவர் வேலைக்கு சென்று விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். நாவல்மூடு பகுதியில் சென்ற போது, எதிரே டெம்போ ஒன்று வந்து மோதியது.
இந்த விபத்தில் சுரேன் படுகாயமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டெம்போ டிரைவரான அம்மாண்டிவிளை பகுதியை சேர்ந்த சுதாகர் (25) என்பவரை கைது செய்தனர்.
0 Comments