புதுக்கடை அருகே பைக் விபத்தில் மினி டெம்போ டிரைவர் பலி!

புதுக்கடை அருகே பைக் விபத்தில் மினி டெம்போ டிரைவர் பலி!

in News / Local

புதுக்கடை அருகே தவிட்டவிளையை சேர்ந்தவர் வின் ெசன்ட் , மினி டெம்போ டிரைவர். நேற்று முன் தினம் இரவு கருங்கல் மங்கல குன்று பகுதியில் உள்ள அக்கா வீட்டுக்கு பைக்கில் சென்றார். திரும்பி வரும் போது கருங்கலில் இருந்து புதுக்கடை அருகே அனந்தமங்க லம், காட்டு விளையை சேர்ந்த சுவாமிதாஸை பின்னால் ஏற்றி வந் துள்ளார். வெள்ளயம் பலம் பகுதியில் வரும் போது பைக் திடீரென நிலை தடுமாறியது.

பின்னர் சாலையோரம் கட்டுமான பணிக்காக இறக்கி வைத்திருந்த செங்கல் கூட்டத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வின்சென்ட் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னால் இருந்த சுவாமிதாஸ் படுகாயம் அடைந் தார். இந்த தகவல் அறிந்ததும் புதுக்கடை போலீஸ் எஸ்ஐ சுரேஷ் குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

சுவாமிதாஸ் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இறந்த வின்சென்டுக்கு மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top