சபரிமலை சீசனை முன்னிட்டு கன்னியாகுமரியில் தற்காலிக கடைகள் ஏலம்

சபரிமலை சீசனை முன்னிட்டு கன்னியாகுமரியில் தற்காலிக கடைகள் ஏலம்

in News / Local

கன்னியாகுமரியில் சபரிமலை சீசனை முன்னிட்டு, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தற்காலிக கடைகள் ஆண்டுதோறும் ஏலம் விடப்படும்.
மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், கடைகள் ஏலம் விட பல கட்டுப்பாடுகளை விதித்தும், கடற்கரை சாலையில் மட்டும் 250 கடைகள் அமைக்கவும் உத்தரவிடப்பட்டது.

இதன்படி, கடந்த வாரம் நடந்த முதல் நாள் ஏலத்தில் 4 கடைகளும்,
நவ., 11ம் தேதி நடந்த ஏலத்தில் திபெத் அகதிகள் 20 கடைகள் என,
இரு கட்டங்களில் மொத்தம் 62 கடைகள் மட்டுமே ஏலம் போனது.
இந்த நிலையில் முறைகேட்டை களைந்து முறையான ஏலம் விடுவதற்கு பேரூராட்சி மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுடன் இணைந்து சிறப்பு அதிகாரியாக நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் திரு. சரவணகுமார் அவர்களை நியமித்து குமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்கள்...

இதை அடுத்து இன்று கன்னியாகுமரியில் கடைகள் ஏலம் விடப்படும் கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளை ஆணையர் திரு. சரவணகுமார் அவர்கள்,
நாகர்கோவில் ஆர்.டி.ஓ., திருமதி. மயில் அவர்கள்,
அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அப்துல் மன்னா அடங்கியோர் ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்கு பின்னர் ஆணையர் அவர்கள் ,

ஐகோர்ட் உத்தரவுபடி வெளிப்படையாக கடைகள் ஏலம் விடப்படுகிறது.
மூன்றாம் கட்டமாக நடக்கும் ஏலத்தில் மீதமுள்ள சுமார் 190 கடைகளுக்கான ஏலத்தில் வெளிமாவட்ட வியாபாரிகள் பங்கேற்க வசதியாக,
அந்தந்த நகராட்சி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏலத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களின் ஒப்பந்தபுள்ளியை வெளியில் வைக்கும் பெட்டியில் போட்டு விட்டு செல்லலாம்.
இதன்பின்னர் வியாபாரிகளின் ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.
250 கடைகள் தவிர வேறு எங்கும் சாலையோர கடைகள் அமைக்க அனுமதி கிடையாது.
மேலும் ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் அச்ச உணர்வின்றி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள ஏலத்தில் பங்கேற்கலாம்..

இவ்வாறு ஆணையர் கூறினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top