விபத்தில் சிக்கிய வாலிபர், சிறுமிக்கு உதவிய கல்குளம் தாசில்தார்!

விபத்தில் சிக்கிய வாலிபர், சிறுமிக்கு உதவிய கல்குளம் தாசில்தார்!

in News / Local

தக்கலை அருகே சாரோடு, நுள்ளிவிளையை சேர்ந்தவர் செல்வன். இவரது மகன் நிஷாந்த் (26), நிஷாந்த் நேற்று மதியம் மணவாளக்குறிச்சியில் உள்ள உறவினர் வீட்டு விழாவில் கலந்து கொள்ள பைக்கில் வந்தார். உடன் அவரது உறவினர் சுஜில்சன் என்பவரது மகள் சிவரஞ்சனியையும் (6) அழைத்து வந்தார்.

உறவினர் வீட்டில் நிகழ்ச்சி முடிந்ததும், சிவரஞ்சனியையும் கூடி கொண்டு, நிஷாந்த் வீட்டுக்கு புறப்பட்டார். பைக் சேரமங்கலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராமல் நிலை தடுமாறி அருகில் உள்ள ஒரு காம்பவுண்ட் சுவரில் மோதியது. இதில் நிஷாந்த், சிவரஞ்சனி ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் ரத்தம் சொட்ட சாலையில் நின்று கொண்டிருந்தனர். காயம் ஏற்பட்டதால் அவர்களால், தானாக மருத்துவம்னைக்கு செல்வதற்கு முடியவில்லை.

அப்போது அந்த வழியாக கல்குளம் தாசில்தார் ராஜசிங் ஜூப்பில் சென்று கொண்டிருந்தார். உடனே அவர் 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தார். அந்த நேரம் 108 வாகனம் வேறு நபரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்க சென்று கொண்டிருந்தது. அதனால் 108 வாகனம் வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. உடனே தாசில்தார் தன்னுடைய ஜூப்பில் இருவரையையும் ஏற்றி குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு சிகிச்சை அளிக்க மருத்துவமனை ஊழியர்களிடம் கூறிவிட்டு புறப்பட்டு சென்றார். விபத்தில் படுகாயம் அ டைந்தவர்களை அவசர நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்த தாசில்தார் ராஜாசிங்கை பொதுமக்கள் பாராட்டினர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top