எந்த ஒரு சங்கடமும் சிரமமுமின்றி வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடந்தது. அந்த தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் எஸ்.எல்.பி. பெண்கள் பள்ளியில் நீண்ட வரிசையில் காத்து நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.
பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் காலை முதலே ஆர்வமாக வந்து வாக்காளர்கள் வாக்களித்து வருகிறார்கள். எந்த ஒரு சங்கடமும் சிரமமுமின்றி வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை பார்க்கும் போது மிகப்பெரிய எழுச்சி தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. மக்கள் ஆர்வமாக வந்து வாக்களிப்பதை வைத்து பார்க்கும் போது 75 சதவீத வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments