தமிழ் கடவுள் முருகபெருமானையும்,கந்தசஷ்டி கவசத்தையும் இழிவாக பேசி வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் ,ஹசிப் முகம்மதுவை காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டு மென கொட்டாரம் சந்திப்பில் பா.ஜ.க வினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் செளந்தர்ராஜன் தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக பா.ஜ.க சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளர் சதீஸ்ராஜா கலந்து கொண்டார்.
தொடர்ந்து பத்திரிக்கையாளரை சந்தித்த அவர் கூறியதாவது;
கறுப்பர் கூட்டம் என்கிற பெயரில் யூட்யூப் சேனல் நடத்தி வரும் ஒரு கும்பல் தொடர்ச்சியாக இந்து மத நம்பிக்கையை கேவலமாக விமர்சித்து வீடியோ வெளியிட்டு வருகிறது. அதிலும் கந்த சஷ்டி கவசத்திற்கு விளக்கம் கூறுவதாக கூறிக் கொண்டு ஹசிப் முகம்மது வெளியிட்ட வீடியோ அறுவெறுப்பின் உச்சமாக இருந்தது. உண்மையில் கந்த சஷ்டி கவசத்திற்கு அர்த்தம் கூறி தெரியாதவர்களக்கு விளக்கம் அளிப்பது போல் அந்த வீடியோ இல்லை. மாறாக கந்த சஷ்டி கவசம் கேட்கும் அனைவர் மனதையும் நோகடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் வார்த்தையையும், உடல் மொழியையும் அவன் வெளிப்படுத்தியிருந்தார்.இது போன்ற விஷமிகளை காவல்துறை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
கந்த சஷ்டி கவசம் என்பது தமிழகத்தில் அதிகபடியான வீடுகள், தொழில் நிறுவனங்களில் தினசரி ஒலிக்க கூடியது.
இந்துக்களின் தொடர் புகார் காரணமாக கருப்பர் கூட்டம் அமைப்பின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது. ட்விட்டர் பக்கம் முடக்கப்படும் வரை கூட கந்த சஷ்டி கவசம் விவகாரத்தில் கருப்பர் கூட்டம் தொடர்ந்து எகத்தாளமான கருத்துகளையே கூறி வந்தது. மேலும் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சித்த அவன் கூட விரைவில் இதை விட ஆபாசமான வீடியோக்களை வெளியிட உள்ளதாக கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளான்.
இந்த நிலையில் வழக்கம் போல் இந்துக்களுக்கு எதிராக யார் பேசினால் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும் சில சினிமா பிரபலங்கள் மற்றும் பத்திரிகை அமைப்புகள் கருப்பர் கூட்டத்திற்கு ஆதரவாக கருத்துகள் தெரிவித்துள்ளது வேதனையாக உள்ளது. போராட்டத்தில் கன்னியாகுமரி சுபாஷ் ,சுயம்பு,பாமா,கிருஷ்ணன் உட்பட பா.ஜ.க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
0 Comments