கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 1000க்கும் மேற்பட்ட செங்கல்சூளைகள் அமைந்துள்ளது. சுமார் 2000ம் தொழிலாளர்கள் செங்கல்சூளை தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு செங்கல் உற்பத்தி நிலையங்கள் பெயர்ப்பெற்றவை குறிப்பாக ஆரல்வாய்மொழி, தோவாளை, செண்பகராமன்புதூர், தாழக்குடி, சந்தை விளை, துவரங்காடு, நாவல் காடு, ஞானதாஸபுறம், இறச்ச குளம், முக்கடல் ராஜாவூர் ,நிலப்பாறை, மகாராஜபுரம், இராமநாதிச்சன் புதூர், கொட்டாரம் போன்ற பல பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் இருபதாயிரம் பேர் செங்கல் செய்யும் தொழில் செய்து வருகின்றனர்.இவர்கள் செங்கல் உற்பத்திக்கு தேவையான மண்ணை தனியார் நில உரிமையாளர்களிடம் முறைப்படி பட்டா மற்றும் ஆவணங்கள் கொடுத்தும் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்த பின்பு தான் மண் எடுக்க அனுமதி வாங்கி தொழில் செய்கின்றனர்..
அதேபோல் அரசு குளங்களை தூர்வாரி ஆழப்படுத்தல் மூலமாகவும் அரசு கொடுக்கும் அனுமதி சீட்டை பயன்படுத்தியும் மண் எடுத்து வருகின்றனர்.ஆனால் சுமார் ஒரு ஆண்டு காலமாக அரசு இதுபோன்ற தேவைகளுக்கு மண் எடுக்க குமரி மாவட்டத்தில் அனுமதிகள் ஏதும் வழங்கப்படாமல் உள்ளது.அதனால் நெல்லை மாவட்டம் மற்றும் ஊர் பகுதியிலிருந்து மண் எடுத்து வந்து தொழில் செய்துள்ளனர் அதுவும் கடந்த மாதம் முதல் நிறுத்தப்பட்டுள்ளது இதனால் செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் அதனை சார்ந்த வாழும் சுமார் 20,000 தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலையில் இருந்து வருகின்றனர் அதுமட்டுமில்லாமல் செங்கல்சூளை தொழிலை நம்பி அண்டை மாநிலத்தில் இருந்து நம் மாநிலத்திற்கு புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் மற்றும் விறகு வெட்டுபவர்கள், செங்கல் சுமை தூக்குபவர்கள்,டெம்போ உரிமையாளர்கள், கட்டிட தொழிலாளர்கள் என நேர்முகமாகவும் மறைமுகமாகவும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செங்கல் விலை உயர வாய்ப்பு உள்ளதால் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று செங்கல் சூளை உரிமையாளர்கள் சார்பில் கூறப்பட்டது. அரசு உடனடியாக தலையிட்டு 20,000 தொழிலாளர்கள் வாழ்வில் முன்னேற்றம் பெற நடவடிக்கை எடுக்க கோரி குமரி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் செங்கல் சூளை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க குமரிமாவட்ட நிர்வாகத்தையும் தமிழக அரசையும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
0 Comments