செவிலியரிடம் தவறாக நடக்க முயன்றவர்  3 1/2 மணி நேரத்தில் அதிரடி கைது

செவிலியரிடம் தவறாக நடக்க முயன்றவர் 3 1/2 மணி நேரத்தில் அதிரடி கைது

in News / Local

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு பெண் செவிலியர் பணியில் இருந்துள்ளார் . அப்போது அங்கு வந்த ஒரு நபர் அங்கு இருந்த செவிலியரிடம் அவரது பணியை செய்ய விடாமல் தடுத்தும் அவரை தவறான எண்ணத்துடனும் நெருங்கி தவறாக நடக்க முயற்சித்துள்ளார்.

அந்த பெண் செவிலியர் சத்தம் போடவே அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் .இதனையறிந்த  காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரி நாராயணன் குற்றவாளியை  கண்டுபிடிக்க  குளச்சல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் சாஸ்திரி தலைமையில் தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.

அதன் பேரில் புதுக்கடை காவல் நிலைய சார்பு ஆய்வாளர்  அனில் குமார் , முத்தையன் ஆகியோரும் , உதவி காவல் கண்காணிப்பாளரின் விரைவுப்படையும் , தனிப்பிரிவு போலீசாரும் , தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

பல குழுவாக காவல்துறையினர் பிரிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு , பல நபர்களிடம் விசாரித்து, சி.சி.டி. வி காட்சிகளை சோதனை செய்து குற்றவாளியை 3 1/2 மணி நேரத்தில் கைது செய்தனர் . பின்னர் விசாரணையில் அந்த நபர் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த லிலு (50) என்பது தெரியவந்தது . பின்னர் அவனை கைது செய்து  சிறையில் அடைத்தனர். விரைவாக செயல்பட்டு குற்றவாளியை பிடித்த காவல்துறையினரை மாவட்ட  காவல் கண்காணிப்பாளர்  வெகுவாக பாராட்டினார் .

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top