ஜெயில் கைதி போல் என்னை நடத்தினர்! மாமியார்-கணவர் உட்பட 4பேர் மீது எஸ்பி ஆபிஸில் இளம்பெண் புகார்!

ஜெயில் கைதி போல் என்னை நடத்தினர்! மாமியார்-கணவர் உட்பட 4பேர் மீது எஸ்பி ஆபிஸில் இளம்பெண் புகார்!

in News / Local

கணவர் உட்பட 4பேர் மீது நடவடிக்கை எடுக்க இளம்பெண் எஸ்பி ஆபீஸில் புகார் அளித்தார்.

இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகார் மனு விபரம்:-

கிள்ளியூர் தாலுகா ,பைங்குளம் பரக்குடிவிளைவீடு நடராஜன் பைஜூ மகளான சபிதா(25) எனக்கும் குழித்துறை,உண்டனாக்குழி,தெக்குவிளைவீடு பிரசாத் மகன் பொன்னானந்த் என்பவருக்கும் கடந்த 2018 - டிசம்பர் மாதம் 12 - ம் தேதி திருமணம் நடந்தது.திருமணத்தின் போது 65.5 பவுன் தங்க நகையும்,3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டுஉபயோக பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.

திருமணத்திற்கு பின்னர் மிக மன அழுத்தத்துடன் இரண்டரை வருடங்களாக வாழ்ந்து வந்தேன். இந்நிலையில் கணவரின் தாயார் சுசீலா, மிகக்கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து கணவன் மனைவிக்குள் உள்ள எந்த சுதந்திரத்தையும் அனுபவிக்கவிடாமல் ஒருஜெயில் கைதி போன்று பல்வேறு தொல்லைகள் கொடுத்து வந்தனர்.

அனைத்திற்கும் காரணமாக இருந்த திருமண இடைத்தரகர் தங்கநாடார், கணவர் பொன்னானந்த்,தகப்பனார் பிரசாத் , தாயார் சுசீலா ஆகிய நான்குபேர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top